ஆங்கில புத்தாண்டு ராசிபலன்
சிம்மம்
தைரியமுடன் செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு குரு 12ம் இடமான கடகத்திலும், ஜூலை5க்குப் பிறகு உங்கள்
ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் சுமாரான பலனே
ஏற்பட்டாலும் குருவின் 5,7,9 ஆகிய பார்வை பலத்தால் நன்மை பெறுவீர்கள்.
பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமைப்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவு
சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்து கிடைக்க யோகமுண்டாகும். அதன் பிறகு
டிச. 20ல் ராசிக்கு 2ம் இடமான கன்னியை அதிசாரமாக(முன்னோக்கி) செல்கிறார்.
இதனால், ஆற்றல் மேம்படும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள். மனதில் துணிச்சல்
பிறக்கும். வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும். ராகு 2ம் இடத்தில்
இருக்கிறார். இவரால் திடீர் செலவு ஏற்படும். கேது 8ம் இடமான மீனத்தில்
நின்று உடல்நலக் குறைவை ஏற்படுத்து வார். 2016 ஜன. 8ல் ராகு உங்கள்
ராசிக்கு ராகுவும், கும்பத்திற்கு கேதுவும் பெயர்ச்சிஅடைகின்றனர். அப்போது
நிலைமை இன்னும் மாறும்.
சனி 4-ம் இடத்தில் சாதகமற்று இருப்பதால்
நன்மையை எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும், அவரின் 3-ம் இடத்துப் பார்வை
சிறப்பாக உள்ளது. செப். 5 வரை சனி வக்கிரமாக இருப்பதால் அவரால் கெடுபலன்
விலகி நன்மை உண்டாகும். டிசம்பர் வரை, சீரான முன்னேற்றம் காணும் காலம்.
புதிய முயற்சியில் தடை குறுக்கிட்டாலும், விடாமுயற்சியால் வெற்றி
காண்பீர்கள். பண வரவுக்கு தகுந்தாற் போல் செலவும் உண்டாகும். சமூகத்தில்
மதிப்பு சீராக இருக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து
செயல்படுவது நல்லது. சுபவிஷயத்தில் எதிர்பார்த்த செய்தி தாமதமாக வந்து
சேரும். பயணம் செல்லும் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.
பணியாளர்கள் பணிச்சுமையை சந்தித்தாலும், அதற்கேற்ப வருமானம் கிடைக்கப்
பெறுவர். வழக்கமான சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. முக்கிய பொறுப்புகளை
புதியவர் யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலர் எதிர்பாராத இடமாற்றத்திற்கு
ஆளாக நேரிடலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
புதிய முதலீடு விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. தொழிலில் போட்டி
குறுக்கிட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. கலைஞர்களுக்கு, புதிய
ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகள்,
எதிர்பார்த்த பதவியை பெறுவதில் தாமதம் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில்
கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. ஆசிரியர்களின் அறிவுரை நன்மைக்கு வழி
வகுக்கும்.
விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும்.
வழக்கு விவகாரத்தில் பேச்சு வார்த்தையால் சமரச தீர்வு காண்பீர்கள்.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுப்பது நல்லது. வேலைக்குச் செல்லும்
பெண்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். 2016 ஜனவரி முதல்,
வளர்ச்சிக்கான வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சியில் ஈடுபட்டு சாதனை
படைப்பீர்கள். அதிர்ஷ்டவசமாக, பண வரவு அதிகரிக்கும். குடும்பத் தேவை நல்ல
முறையில் நிறைவேறும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.
தடைபட்ட திருமணம் இனிதே கைகூடும். உறவினர்களின் ஆதரவால் நன்மை பெறுவீர்கள்.
புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. அல்லது வசதியான வீட்டுக்கு
குடிபுகுவீர்கள். புதிதாக வாகனம் வாங்கவும் யோகமுண்டாகும்.
பணியாளர்களுக்குப் பணிச்சுமை குறையும். அதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில்
கிடைக்கும். சிலர் இழந்த பதவியை மீண்டும் பெறுவர். போலீஸ், பாதுகாப்பு
தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றமான நிலை அடைவர். வியாபாரத்தில்
வாடிக்கையாளர் ஆதரவால் ஆதாயம் பெருகும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.
மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழி காண்பர்.
விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலால் வருமானம் அதிகரிக்கும். புதிய நிலம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.
பெண்கள்
உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு
பெருமை கொள்வீர்கள். மொத்தத்தில், சாதனைகளைத் தாண்டி சாதனைபடைக்கும் நல்ல
ஆண்டாக அமையும்.
பரிகாரம்: சனியன்று பெருமாள் கோயிலுக்கு
செல்லுங்கள். காகத்திற்கு எள் சாதம் படைத்து வணங்குங்கள். குருவுக்கு
கொண்டைக் கடலை மாலை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு
முன்னேற்றம் தரும். பாம்பு புற்றுள்ள கோயிலுக்கு சென்று வாருங்கள்