தமிழ் புத்தாண்டு ராசிபலன்
மிதுனம்
எதையும் சமாளிக்கும் திறனுள்ள மிதுன ராசி அன்பர்களே!
இப்போது
குரு உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார். இது மிகவும் உகந்த
நிலை. எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். துணிச்சல் பிறக்கும். பண
வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். இவர் ஜூலை5ல் சிம்ம ராசிக்கு
பெயர்ச்சி அடைகிறார். அப்போது உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். அதேநேரம்,
டிச. 20ல் அவர் அதிசாரமாகி (முன்னோக்கி) கன்னி ராசிக்கு செல்கிறார். அங்கு
அவர் மன உளைச்சலைத் தர இடமுண்டு. ராகு தற்போது கன்னி ராசியில்
இருக்கிறார். இங்கு அவர் மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க
இடமுண்டு. கேது 10-ம் இடமான மீனத்தில் இருக்கிறார். அவர் உடல்நிலையில்
சிறுசிறு பிரச்னைகளைத் தரலாம். ராகு 2016 ஜனவரி 8ல் சிம்ம ராசிக்கு
பெயர்ச்சி ஆனவுடன், செயல்களில் வெற்றியையும், பொருளாதார வளத்தையும்
குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். அதேநேரம்
கேது கும்ப ராசிக்கு பெயர்ச்சியாவதால், வருகின்ற வருமானத்துக்கு தக்க
செலவைத் தந்து விடுவார்.
இப்போது சனீஸ்வரர் விருச்சிகத்தில் இருக்கிறார். இங்கு நல்ல
பணப்புழக்கத்தையும், செயல்களில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல்
பிறக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். செப். 5 வரை
வக்கிரத்தில் சிக்கி உள்ள அவர், மேற்கண்ட பலன்களை சற்று குறைத்து தர
வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார். ஆண்டின் இறுதிப்பகுதியில் எடுத்த
செயல்களை சிறப்பாக செய்து முடிக்கலாம். மதிப்பு, மரியாதை சிறப்பாக
இருக்கும். உங்கள் செல்வாக்கு மேம்படும். அக்கம் பக்கத்தார் உங்களை
பெருமையாக பேசுவார்கள். வீட்டுக்கு தேவையான வசதிகள் அதிகரிக்கும்.
தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். விருந்து, விழா என சென்று
வருவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம்
கிட்டும். புதிய வீடு கட்ட ஏற்ற மாதம். தற்போதுள்ள வீட்டை விட அதிக வசதி
மிகுந்த வீட்டிற்கு குடிபுகலாம். உறவினர்கள் வருகையும், அவர்களால்
நன்மையும் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு வேலையில் ஆர்வம் பிறக்கும்.
வேலைப்பளு வெகுவாக குறையும். புதிய பதவி வர வாய்ப்புண்டு. சிலர்
மேல்பதவிக்கு உயர்த்தப்படுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மேல்
அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு
மாற்றம் கிடைக்கப் பெறலாம். கோரிக்கை நிறைவேறும். படித்துவிட்டு வேலைஇன்றி
இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் புதிய தெம்புடன் காணப்படுவர். வருமானம்
அதிகரிக்கும். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள்.
கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். வாடிக்கையாளர்கள் உங்களிடம் நன்மதிப்பு
வைத்திருப்பர். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் தாராளமாக கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
அரசியல்வாதிகள் நற்பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவர். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி ஏற்படும். விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பும் சிலர் பெறலாம்.
விவசாயிகள் முன்னேற்றமான பலனை காணலாம். புதிய சொத்துக்களை வாங்கலாம்.
பெண்கள்
முன்னேற்றம் அடைவர். புத்தாடை நகை, ஆபரணம் வாங்கலாம். விருந்து, விழா என
சென்று வரலாம். 2016 ஜனவரி முதல் எதையும் சற்று முயற்சி எடுக்க
வேண்டியிருக்கும். பணப்புழக்கம் இருக்கும். அதே நேரம் செலவும் வரும்.
கணவன்-மனைவி இடையே அன்பு தொடரும். சுப நிகழ்ச்சிகள் தடைபட்டு நிறைவேறும்.
பணியாளர்களுக்கு கடந்த காலம் போல் அனுகூலமாக இருக்காது. சம்பள உயர்வுக்கு
தடை ஏதும் இல்லை. மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழிலதிபர்கள்,
வியாபாரிகள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். கலைஞர்கள்,
அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து
படிக்க வேண்டும். விவசாயிகள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டும்.பெண்கள்
ஆடம்பரத்தை தவிர்க்கவும். மொத்தத்தில் 12 மாதத்தில் 8 மாதம் சூப்பராக
அமையும்.
பரிகாரம்: காளியை ஞாயிறன்று ராகு காலத்தில்
தரிசனம் செய்யுங்கள். விநாயகர் வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
ஊனமுற்றவர்களுக்கும், ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள்.
துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுங்கள்.