தமிழ் புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம்

சாதுர்ய குணம் படைத்த ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மன்மத ஆண்டு உங்களுக்கு ஓரளவு பலன்களையே தரும். காரணம் தற்போது குரு 3-ம் இடமான கடகத்தில் இருக்கிறார். இந்த இடம் பெரிய சிரமங்களைத் தராது என்றாலும், பதவி உயர்வு, திருமண எதிர்பார்ப்பு போன்றவை தாமதமாகும். ஜூலை 5ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடையும் குரு அர்த்தாஷ்டமம் என்ற நான்காம் இடத்தைப் பெறுகிறார். இதுவும் ஓரளவுக்கே பலன்களைத் தரும். டிச. 20 முதல் பிப்.7வரை அதிசாரமாக (முன்னோக்கி) கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் குதுõகலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். வருமானம் கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு 5-ம் இடமான கன்னியில் உள்ளார். அவரால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னை உருவாகலாம். அதேநேரம் கேது 11-ம் இடமான மீனத்தில் இருந்து பிரச்னைகளுக்கு தீர்வைத் தந்து கொண்டிருப்பார். பணவரவில் இருக்கும் தாமதத்தைக் குறைத்து தேவையான நேரத்தில் கிடைக்க வழி செய்வார்.

2016 ஜன. 8ல் ராகு,சிம்மராசிக்கும், கேது கும்பராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கால கட்டத்தில் உங்கள் பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். சனிபகவான் 7-ம் இடமான விருச்சிகத்தில் இருப்பதால், நன்மை தர முடியாது. ஆனால், இவர் செப். 5 வரை வக்கிரத்தில் இருப்பதால் கெடுபலன் தர முடியாத நிலை ஏற்படும். சொந்த ஊருக்கு வந்து போக வாய்ப்பைக் கொடுப்பார். பணநிலையையும் முன்னேற்றுவார். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க வாய்ப்பு கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். டிசம்பர் வரை கேதுவின் பலத்தால் கையில் பணப்புழக்கம் கூடும். முயற்சியில் இருந்த தடை விலகும். குருவின் பார்வையால் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வீடு வாங்க சந்தர்ப்ப சூழ்நிலை கை கொடுக்கும். அதேநேரம், வீடு, பொருள் எது வாங்க இருந்தாலும், அதனால் உங்களுக்கு பயன் உள்ளதா என்று ஆலோசித்து வாங்குவது நல்லது. இந்த வகையில், கணவன், மனைவி ஒருவருக்குஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம்.நீங்கள் எது செய்தாலும், உங்கள் உறவினர்களிடம் சொல்ல வேண்டாம். அவர்கள் உங்கள் மீது பொறாமைப்படும் கிரகச் சூழ்நிலை உள்ளது. வேறு யார் மூலமோ அவர்களுக்கு தெரிந்து விட்டாலும் கூட, அவர்களிடம்வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். இடமாற்றம் ஏற்படலாம். ஆனாலும், வழக்கமான வருமானத்திற்கு பாதிப்பிருக்காது. சேமிப்பில் கவனம் செலுத்தினால் பிரச்னையே இருக்காது. போலீஸ், பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். அரசு வகையில் நன்மை கிடைக்க தாமதமாகும். மனைவி பெயரில் தொழில், வியாபாரத்தை மாற்றி விட்டால் சிறப்படையும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் பெறுவதில் முயற்சி தேவைப்படும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற போராடுவர். ஆன்மிகப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நற்பெயர் உண்டாகும்.

மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது.

விவசாயம் சீரான வளர்ச்சி பெறும். மானாவாரி பயிர்களில் வருமானம் காணலாம். வழக்கு விவகாரம் சற்று இழுத்தடிக்கும். பெண்கள் சிக்கனம் கடைபிடிப்பது நல்லது. 2016 ஜனவரி முதல் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பொருளாதாரம் மேம்படும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு மழலைபாக்கியம் கிடைக்கும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். சிலர் தொழில் காரணமாக குடும்பத்தை வேறு ஊருக்கு மாற்ற நேரிடலாம்.

விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரைத் தவிர்க்கவும். அக்டோபர், நவம்பரில் புதிய சொத்து வாங்கலாம்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். உடல் நலம் சிறப்பாக இருக்கும். ரிஷப ராசியின் சின்னம் காளை. உங்களுக்குபாயவும் தெரியும். பாசமலராக மாறவும் தெரியும்.இந்த இயற்கையான மனதைரியம் என்றும் உங்களுக்கு கை கொடுக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவுங்கள். காளியை வழிபடுங்கள். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு பாலபிஷேகம் செய்யுங்கள். சனீஸ்வரரை வணங்கி அர்ச்சனை செய்யுங்கள்.

அதிகம் படித்தவை

^