தமிழ் புத்தாண்டு ராசிபலன்

மகரம்

சாந்தமே வடிவான மகர ராசி அன்பர்களே!

புத்தாண்டு துவக்கத்தில் குரு பகவான் 7-ம் இடத்தில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. அவர் சுப நிகழ்ச்சிகளை நடத்தித் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைத்த செயலை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். குரு, ஜூலை5ல், சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போது தற்போது நடக்கும் நன்மையின் அளவு குறையும். டிசம்பர் 20ல் அதிசாரமாக (முன்னோக்கி சென்று) கன்னி ராசிக்கு செல்கிறார். அப்போது அவரால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். ராகு தற்போது 9-ம் இடத்தில் உள்ளார். அங்கு அவரால் முயற்சிகளில் தடை, எதிரிகளின் இடையூறு வரலாம். கேது தற்போது 3-ம் இடத்தில் உள்ளார். அவர் இறை அருளையும் காரிய அனுகூலத்தையும் தருவார். ராகு 2016 ஜனவரி 8ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போது அவர் உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். கேது ஜனவரி 8ல், கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவரால் சிறுசிறு உடல் உபாதை வரலாம். சனிபகவான் இப்போது 11-ம் இடத்தில் சாதகமாக இருக்கிறார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும்.

விருச்சிக ராசியில் இருக்கும் சனி, செப். 5 வரை வக்கிரத்தில் சிக்கி உள்ளார். இந்த காலத்தில் அவரால் கிடைக்கும் நல்ல பலன்களின் அளவு குறையும்.வரும் டிசம்பர் வரை குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் தொடரும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபம் காண்பர். புதிய தொழில் தொடங்கலாம். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் வளம் காணலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். அரசிடமிருந்து எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும். சிலர் வெளிநாட்டுடன் தொடர்பு கொண்டு வியாபாரத்தை வளம்பெறச் செய்வர். உங்களிடம் வேலைபார்க்கும் ஊழியர்கள் நம்பிக்கையுடனும், நல்ல எண்ணத்துடனும் நடந்துகொள்வர். கலைஞர்களுக்கு நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் பொருள் வளத்தோடு புதிய பதவியும்,புகழும்கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களிலும் நல்ல வருமானம் கிடைக்கும். நவீன உத்திகளைக் கடைபிடித்து விளைச்சல் பெருகும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும். பெண்கள் நிம்மதி அடைவர். ஜூலை 5க்கு பிறகு வீண்விவாதங்களை தவிர்த்தால் சிரமம் குறையும். பணியாளர்கள் முன்புபோல் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வியாபாரிகள் அரசின் உதவி கிடைப்பது அரிதாகும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்கள் பளுவை சுமக்க வேண்டி வரும். 2016 ஜனவரி முதல் தடைகள் அகலும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களை புகழ்வர். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். பணியாளர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். வேலைப்பளு குறையும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். அரசின் உதவி கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் வரப்பெற்று முன்னேற்றம் காணலாம்.

மாணவர்கள் சிறப்பான பலனை பெறலாம்.

விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு வகையில் அதிகம் சம்பாதிப்பர். வழக்கு விவகாரங்களில் தீர்ப்பு சாதகமாக இருக்கும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.

பரிகாரம்: வக்கிர காலத்தில் சனீஸ்வரரை வணங்கினால் அவர் தடைகளை உடைத்து முன்னேற வழிவகுப்பார். துர்க்கை வழிபாடும், பைரவர் வழிபாடும் உங்களை முன்னேற்றும்.
ஜூன்மாதத்திற்கு பிறகு வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்

அதிகம் படித்தவை

^