தமிழ் புத்தாண்டு ராசிபலன்
தனுசு
பெருந்தன்மையுடன் நடக்கும்தனுசு ராசி அன்பர்களே!
குரு,
உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பானதல்ல என்றாலும்,
அவருடைய பார்வை பலத்தால் நன்மை பெறுவீர்கள். குரு ஜூலை 5ல் சிம்ம ராசிக்கு
பெயர்ச்சியாகிறார். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அன்றாடப் பணிகளில்
உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி
காண்பீர்கள். கையில் பணப்புழக்கம் கூடும். குடும்பத் தேவைகள் நல்ல முறையில்
பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்களின் உதவி
சரியான நேரத்தில் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தடைபட்டு
வந்த சுபவிஷயம் இனிதே நடந்தேறும். திருமணம் நடக்க வாய்ப்புண்டு. அதன் பிறகு
டிச. 20ல் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போதுமன சஞ்சலத்தை
ஏற்படுத்துவார். ராகு தற்போது 10ம் இடமான கன்னியில் இருப்பதால், பெண்கள்
வகையில் தொல்லை ஏற்படலாம். கேது 4ம் இடமான மீனத்தில் இருப்பதால் நட்பு
விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. 2016 ஜன. 8ல் ராகு
சிம்மத்திற்கும், கேது கும்பத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார். ராகுவால்
எதிரி தொல்லை உண்டாகலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
ஆனால், கேதுவால் பக்தி எண்ணம் மேம்படும். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி
காணலாம். பொருளாதாரம் மேம்படும். இப்போது சனி பகவான் 12-ம் இடத்தில்
இருக்கிறார். அவரால் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிரிகளின் இடையூறு
ஏற்படலாம். இருந்தாலும், சனியின் 7ம் பார்வையால் நல்ல பொருளாதார வளம்
உண்டாகும். பகைவரை முறியடிக்கும் பலம் உண்டாகும். சனிபகவான் செப். 5 வரை
வக்கிரம் அடைவதால், கெடுபலன் தர மாட்டார் மாறாக நன்மையளிப்பார். டிசம்பர்
வரை, குடும்பத்தில் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வருமானம்
இருந்தாலும், செலவும் கட்டுக்கடங்காமல் செல்லும். குடும்பத்தில் சீரான வசதி
இருக்கும். திருமணம் போன்ற சுபவிஷயங்களில் தடை ஏற்பட்டு மறையும்.
பணியாளர்கள்
பணிச்சுமைக்கு ஆளானாலும், அதற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். மேல் அதிகாரிகளின்
குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். வியாபாரிகள் வாடிக்கையாளர் நலனில்
கவனம் செலுத்துவர். அரசுவகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கலைஞர்கள்
தீவிர முயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல் வாதிகள்
பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்கள் குருவின் பார்வை
பலத்தால், முயற்சிக்கேற்ப பலன் அடைவர். விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம்
நல்ல வருமானம் காண்பர். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலன் கிடைக்கும்.
பெண்கள் மனதில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள்
சீரான வளர்ச்சி காண்பர். ஜூலை 5க்கு பிறகு புதிய முயற்சியில் வெற்றி
காண்பீர்கள். பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் செல்வாக்கு மேலோங்கும்.
அக்கம்பக்கத்தினர் மத்தியில் நட்பு மலரும். தடைபட்டு வந்த திருமணம் இனிதே
கைகூடும். வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். பணியாளர்அதிகார
அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப்
பெறலாம். வியாபாரிகள் அரசின் சலுகை கிடைக்கப் பெறுவர். கலைஞர்கள் புதிய
ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று வளர்ச்சி காண்பர். 2016 ஜனவரி முதல், கேதுவால்
பக்தி உயர்வு மேம்படும்.செயல் அனைத்திலும் எளிதாக வெற்றி காணலாம்.
குடும்பத் தேவை பூர்த்தியாகும். கணவர், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுத்து அனுசரித்து போகவும். சுபவிஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் நன்மையே
உண்டாகும். பணியாளர்கள் சிறப்பான பலன் காண்பர். போலீஸ், பாதுகாப்பு
தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.
வியாபாரிகள் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
கலைஞர்கள் முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் பெறுவர்.
மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகள் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர் மூலம் நல்ல மகசூல் காண்பர்.
பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.
பரிகாரம்:
சனீஸ்வரனை வழிபட்டு, ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்தால் தடையின்றி வளர்ச்சி
காணலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்மை தரும்.
வெள்ளியன்று மாரியம்மனுக்கு தீபமிட்டு வழிபடுங்கள். பாம்பு புற்றுள்ள
கோயிலுக்கு செல்வதும் நன்மை தரும்.