தமிழ் புத்தாண்டு ராசிபலன்
துலாம்
உழைப்பில் உறுதி கொண்ட துலாம் ராசி அன்பர்களே!
தற்போது
குரு, ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்தாலும், அவரின் 5-ம்
இடத்துப்பார்வையால் நன்மை உண்டாகும். குரு ஜூலை 5ல் சிம்ம ராசிக்கு
பெயர்ச்சி அடைகிறார். 11-ம் இடத்தில் இருக்கும் அவரால் இனி வருங்காலம்
வளர்பிறையாக மாறும். பொருளாதார வளம் மேம்படும். பணி சிறப்படையும்.
எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அதன் பிறகு டிச.20ல்
அதிசாரமாக(முன்னோக்கி) கன்னி ராசிக்கு செல்கிறார். குரு 12-ம் இடத்தில்
இருக்கும் போது செலவு கூடும். அலைச்சல் அதிகரிக்கலாம். ராகு தற்போது 12-ம்
இடத்தில் இருக்கிறார். அதன் மூலம் வெளியூர்பயணத்தையும் எதிரிகளால்
இடையூறையும் ஏற்படுத்தலாம். கேது மீனத்தில் இருந்து நன்மையை வாரி
வழங்குகிறார். பொருளாதாரம் சிறக்கும். பகைவர் தொல்லை விலகும். அபார ஆற்றல்
பிறக்கும். 2016 ஜன.8ல் ராகு சிம்மத்திற்கும், கேது கும்பத்திற்கும்
பெயர்ச்சிஆகின்றனர். ராகுவால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில்
மகிழ்ச்சி நிலைக்கும். பெண்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். கேதுவால்
உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும், பாதிப்பேதும் உண்டாகாது. சனிபகவான் ராசிக்கு 2
ல் இருக்கிறார். இவரால் பணிச்சுமை அதிகரித்தாலும், அதற்கான நன்மையைத் தரத்
தயங்க மாட்டார். மேலும் சனியின் 10-ம்இடத்துப் பார்வையால் தடைபட்ட
செயல்கள் இனிதே நிறைவேறும்.டிசம்பர் வரை, செலவைக் குறைத்து சிக்கனத்தைக்
கடைபிடிப்பது நல்லது. விவாதங்களில் ஈடுபடவேண்டாம். விட்டுக் கொடுத்து
அனுசரித்து போகவும். ஜூன் மாதத்திற்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம்
கைகூடும். புதிதாக மனை, வீடு கட்ட வாய்ப்புண்டு. வாகன யோகமும் அமையும்.
பணியாளர்கள்
பணிச்சுமையைச் சந்தித்தாலும், உழைப்புக்கு ஏற்ப ஆதாயம் கிடைக்கும். ஜூன்
மாதத்திற்கு பிறகு அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய
இடமாற்றம் கிடைக்கும்.வியாபாரிகள் ஜூலை5க்கு பிறகு தொழிலில் அமோக லாபம்
அடைவர். அரசின் வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.கலைஞர்கள்
முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள்
தலைமையின் ஆதரவுடன் சீரான வளர்ச்சி காண்பர். கலைஞர்கள் சிறப்பான பலன்
கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்க
வாய்ப்புண்டு. மாணவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கப் பெறுவர்.
ஜூலை5க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் காண்பர். விவசாயிகளுக்கு வளர்ச்சியான
காலகட்டமாக அமையும். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலன் கிடைக்கும்.
செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத்தில் நிலக்கடலை மற்றும் கிழங்கு
பயிர்கள் நல்ல மகசூலைக் கொடுக்கும். இந்தக் காலக்கட்டத்தில் புதிய நிலம்
வாங்க வாய்ப்புண்டு. பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர். ஜூலை5க்குப்
பிறகு பொன்,பொருள் சேரும். குடும்பத்தில் நன்மை மேலோங்கும். 2016 ஜனவரி
முதல், வருமானம் உயர்ந்தாலும், செலவும் கட்டுக்கடங்காமல் போகும்.
குறுக்கிடும் தடைகளை முயற்சியுடன் முறியடித்து வெற்றி காண்பீர்கள்.
பணியாளர்கள்
அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்பட்டால் நற்பெயர் கிடைக்கும். சிலர்
இடமாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும்.
வியாபாரத்தில் உழைப்புக்கு தகுந்த ஆதாயம் கிடைக்கும். புதிய முதலீடு
விஷயத்தில் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க கடின முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.
அரசியல்வாதிகள் தலைமையின் வழிகாட்டுதலை பின்பற்றி வளர்ச்சி காண்பர்.
மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.
விவசாயிகள் உழைப்புக்கேற்ப விளைச்சல் காண்பர். வழக்கு விவகாரத்தில் நிதானம் தேவைப்படும்.
பெண்கள் குடும்பச் செலவுக்கான பணம் தடையின்றி கிடைக்கும். உடல்நலனில் அக்கறை உண்டாகும்.
பரிகாரம்:
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுங்கள்.
அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யுங்கள். வெள்ளியன்று ராகுகாலத்தில்
காளிக்கு தீபமேற்றி வழிபடுங்கள். நரசிம்மரைத் தரிசியுங்கள். ஆஞ்சநேயருக்கு
துளசி மாலை சாத்தி வணங்குங்கள்.