தமிழ் புத்தாண்டு ராசிபலன்
கடகம்
உறுதியான உள்ளம் படைத்த கடக ராசி அன்பர்களே!
குரு பகவான்
தற்போது உங்கள் ராசியில் இருக்கிறார். அவரால் வீண் அலைச்சல், குழப்பம்
ஏற்படும் என்றாலும், அவரின் பார்வை பலம் சிறப்பாக உள்ளது. ஜூலை 5ல்
சிம்மத்திற்கு குரு பெயர்ச்சி அடைகிறார். இதன் பின் மனதில் துணிச்சல்
பிறக்கும். ஆற்றல் மேம்படும். தொழிலில் மந்தநிலை மாறி வருமானம்
அதிகரிக்கும். வீட்டுத் தேவை அனைத்தும் எளிதில் நிறைவேறும். வாசமலர்
பூத்திடும் வசந்த காலம் போல வாழ்வில் இனிய அனுபவம் உண்டாகும். டிசம்பர்
20ல், குரு அதிசாரமாக (முன்னோக்கி) கன்னி ராசிக்கு செல்கிறார். இதனால் பதவி
உயர்வு கிடைக்க தாமதமாகும். ராகு தற்போது 3-ம் இடத்தில் இருக்கிறார்.
அவரால் செயலில் வெற்றி, பொருளாதார வளம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி,
தொழிலில் வளர்ச்சி உண்டாகும்.
கேது தற்போது மீனத்தில் இருக்கிறார்.
அங்கு அவரால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். ராகு 2016 ஜன. 8ல் சிம்ம ராசிக்கு
பெயர்ச்சி அடைகிறார். இதனால், திடீர் செலவு, குடும்பத்தில் பிரச்னை ஏற்பட
வாய்ப்புண்டு. சனி பகவான் 5-ம் இடத்தில் இருப்பது சிறப்பானது என்று சொல்ல
முடியாது. 5-ல் சனி இருக்கும் போது குடும்பத்தில் பிரச்னை தருவார் என்பது
பொது விதி. ஆனால் செப்.5 வரை வக்கிரமாக இருப்பதால், சனியால் சிறப்பாக
செயல்பட முடியாது. அந்த வகையில் கெடுபலன் தர முடியாது. மாறாக நன்மையே
தருவார். டிசம்பர் வரை, குடும்பத் தேவை பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே
அவ்வப்போது கருத்து வேறுபாடு குறுக்கிட்டாலும், உங்கள் மென்மையான
அணுகுமுறையால் பிரச்னை பறந்தோடும். சுபநிகழ்ச்சிகளை ஆடம்பரமாகச் செய்வதால்
கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும், உழைப்புக்கு தகுந்த வருமானம்
கிடைக்காமல் போகாது. சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்கள்
உதவிகரமாகச் செயல்படுவர். முயற்சி செய்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.
வியாபாரிகள்
எதிரிகளால் பிரச்னையை சந்தித்தாலும், தக்க பதிலடி கொடுப்பீர்கள்.
நிர்வாகச் செலவும் கூடும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. கலைஞர்கள்
புதிய ஒப்பந்தம் பெற முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். அதே நேரம் புகழ்,
பாராட்டுக்கு குறைவிருக்காது. அரசியல்வாதிகள் தொண்டர்கள் மத்தியில்
செல்வாக்குடன் திகழ்வர். மக்கள்நலப் பணிகளில் ஈடுபடுவர். மாணவர்கள்
அக்கறையுடன் படிப்பது அவசியம். ஜூலை 5க்கு பிறகு கல்வியில் முன்னேற்றம்
காண்பர். வக்கீல்கள், ஆசிரியர்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். விவசாயிகள்
எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். குறிப்பாக நெல், கோதுமை, சோளம் ஆகிய
பயிர்கள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலனே
கிடைக்கும். பெண்கள் ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர். பிள்ளைகளால் பெருமை
அடைவீர்கள். உடல் நலம் சிறப்படையும். 2016 ஜனவரியில் இருந்து, குருவால்
வரும் நன்மை குறையும். தொழிலில் தடைகள் குறுக்கிடலாம். சமூகத்தில் மரியாதை
சுமாராக இருக்கும். யாருடனும் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
சுபவிஷயம் குறித்த பேச்சில் தாமதம் ஏற்படலாம். ஆனால், குருவின் பார்வையால்,
முயற்சிக்கேற்ப நன்மை கிடைக்கும். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு
வரலாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். முதலீட்டைஅதிகப்படுத்தக்
கூடாது.
பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளானாலும், வழக்கமான பதவி, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
கலைஞர்கள் மிதமான வளர்ச்சி காண்பர்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றினால் கல்வி வளர்ச்சி ஏற்படும்.
விவசாயிகள்
போதிய வருமானம் கிடைக்கப் பெறுவர். அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத்
தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் விளைச்சல் அதிகரிக்கும்.
பெண்களின் எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
பரிகாரம்:
சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வழிபடுங்கள். சனியன்று ராமரை வழிபடுவது
நன்மைஅளிக்கும். ஆதரவற்ற பெண்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். 2016
ஜனவரிக்குப் பின், நவக்கிரகங்களை தவறாமல் வழிபடுங்கள். பத்ரகாளியம்மனுக்கு
எலுமிச்சை பழ தீபமேற்றி பூஜியுங்கள்.