சனி பெயர்ச்சி பலன்கள்
மீனம்1
மீன ராசிக்கு சனி பகவான் இராசி/லக்கினத்திற்க்கு 10ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். ஆகவே லாபாதிபதி 10இல் இருப்பது நன்மை. விரயஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், சப்தமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், இதுநாள்வரை பீடித்த நோய் உங்களை விட்டு விலகி விடும்.
மனகுழப்பம் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வாகனம், வீடு அமையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் பிரமாதமாக நடக்கும்.
குழந்தை பாக்கியம் ஏற்படும். ஆனால், சனி பகவான் விரயஸ்தானத்தை பார்ப்பதால் வீண் விவகாரம் செய்ய வேண்டாம். வீண் பேச்சை தவிர்க்கவும்.
10ஆம் இட சனி பிரமாதமான வாழ்க்கை கொடுக்க போகிறான். தேவையற்ற சிந்தனைகளால் மனதை சிதறடிக்க வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வரவிருக்கும் சனிபகவான், உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்.
பரிகாரம்:
சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயர் வணங்கி பாடல்களை பாடுங்கள் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வையுங்கள். விநாயகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வாருங்கள்.