சனி பெயர்ச்சி பலன்கள்

கும்பம்

கும்ப ராசிக்கு லாப சனியாக உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 11ஆம் இடத்திற்கு வந்துவிட்டார் சனிபகவான். இனியெல்லாம் நல்லதுதான்.

ஜென்ம இராசியையும், பஞ்சமதிரிகோணத்தையும், அஷ்டமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், ஆண்டி போல் அலைந்தவர்கள் அரசனை போல் வாழப்போகிறீர்கள்.

உங்கள் ராசி/லக்கினத்திற்கு ஜென்மாதிபதி ஜென்மத்தை பார்வை செய்வதால் கஷ்டங்கள் அத்தனையும் நீங்கி. திருமணம் கைக்கூடும்.

உத்தியோகத்தில் சிரமம், பளு குறையும் வெற்றி கிடைக்கும். கடன் பிரச்னை தீரும். பொதுவாக, மனக்குழப்பங்கள் அத்தனையும் தீர்ந்து விடும்.

தூரத்து உறவினரின் உதவி கிடைக்கும். தெய்வ பணிகள் அதிகரிக்கும். பேச்சில் மட்டும் நிதானம், பொறுமை தேவை. சகோதர உறவில் மகிழ்ச்சி ஏற்படும். லாப சனி உங்களுக்கு யோகம் தரும்.

பரிகாரம்:

சிவனுக்கு திங்கள்கிழமைகளில் வில்வ இலை சமர்ப்பியுங்கள். ஏழை பிள்ளைகளுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

அதிகம் படித்தவை

^