சனி பெயர்ச்சி பலன்கள்

மகரம்

மகர சாசிக்க ஏழரை சனி ஆனால் பயப்படவேண்டாம் உங்களுக்கு வந்தது ஏழரைதான் ஆனால் சுக்கிரன் சாரத்தில் வரவிருப்பதால் நன்மைகளை அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது சனிபகவான் கொடுப்பான். ருண-ரோகஸ்தானம், தனஸ்தானம், பாக்கியஸ்தானத்தை சனி பார்வை செய்வதால் கடன் சுமை நீங்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் வாக்கு மேன்மை பெறும். உடல்நலனில் கவனம் தேவை.பயணங்கள் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும். மனைவியின் ஆலோசனை சரியாக இருக்கும்.

12ஆம் இடத்திற்கு சனிபகவான் வந்திருந்தாலும் பிரச்சினையில்லை இந்த ஏழரை உங்களுக்கு வளம் தரும்.
பரிகாரம்:

சனிக்கிழமையில் சாதத்தில் எள் கலந்து காக்கைக்கு வையுங்கள். வீட்டில் ஸ்ரீபார்த்தசாரதி படம் வைத்து அந்த படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி கல்கண்டு வைத்து வணங்குங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

அதிகம் படித்தவை

^