சனி பெயர்ச்சி பலன்கள்

தனுசு

தனுசு ராசிக்கு சனிபகவான் ஜென்மத்தில் வந்தமர்ந்து விட்டார். ஏற்கனவே ஏழரை சனி, தீராத குறைக்கு ஜென்ம சனியுமா? என்று பயப்பட வேண்டாம்.

சுக்கிரன் சாரத்தில் வரவிருப்பதால், கெடுதல் செய்ய மாட்டார் என நம்பலாம். கீர்த்திஸ்தானம், சப்தமஸ்தானம், ஜீவனஸ்தானத்தை சனிபார்வை செய்வதால், சகோதர-சகோதரிகளுக்கு யோக காலம்தான்.

திருமணம் நடைபெறும். திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் ஸ்தானத்திற்கு 6ஆம் இடத்தை பார்வை செய்வதால் அவசரம் வேண்டாம். புது வாகனம் வாங்க வேண்டும் என்கிற விருப்பம் நிறைவேறும். பழைய கடன் வசூலாகும். உடல்நலனில் சற்று கவனம் தேவை. வாழ்க்கைத் துணைவருக்கு உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பிரச்னைகள் வரலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். பொதுவாக ஜென்ம சனியாக இருந்தாலும் அதிர்ஷ்ட காலம் உங்கள் வசம்.
பரிகாரம்:

சனிக்கிழமையில் ஸ்ரீ அனுமனுக்கு வெண்ணை படைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் விநாயகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி, சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

அதிகம் படித்தவை

^