சனி பெயர்ச்சி பலன்கள்
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு இதுவரை ஜென்ம ராசி/லக்கினத்தில் இருந்த சனி பகவான் உங்களை விட்டு விலகி விட்டார். இனி வாழ்வில் சுமை இல்லை.
சனி 2ஆம் இடத்திற்கு வந்திருப்பதால் கைக்கு பணம் வரும். சுகஸ்தானத்தை சனிபகவான் பார்வை செய்வதால், தீராத வியாதியும் தீர்ந்து விடும். தடைபட்ட கல்வி தொடர வாய்ப்பு.
பழைய புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் கவனமாக இருக்க வேண்டும். புண்ணிய ஸ்தலங்களுக்கு போகும் பாக்கியம் கிடைக்கும்.
9ஆம் இடத்திற்கு 12ஆம் இடமான 8ஆம் இடத்திற்கு சனி பார்வைபடுவதால், பெற்றோர் உடல்நலனில் சிறு, சிறு உபாதைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பாத சனி கெடுதல் செய்யும் என்பார்கள் சனி பகவான், சுக்கிரன் சாரத்தில் சஞ்சரிக்கும் நிலை வருவதால் நன்மையே நடக்கும்.
பரிகாரம்:
சனிபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 8 முறை உச்சரித்து வாருங்கள். சனிக்கிழமையில் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை வையுங்கள். பிரதோஷத்தில் சிவாலயத்திற்கு சென்று வணங்குங்கள்.