சனி பெயர்ச்சி பலன்கள்
கன்னி
கன்னிக்கு சனி பகவான் உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 4ஆம் இடத்தில் அமர்ந்து, அர்த்தாஷ்டம சனியாகிவிட்டார்.
ஆனாலும் நீங்கள் அதற்காக பயப்பட வேண்டாம். உங்கள் ராசி/லக்கினத்திற்கு பஞ்சமாதிபதி திரிகோணாதிபதி கேந்திரமான 4ஆம் இடத்தில் அமர்ந்துவிட்டதால் கெடுதல் செய்ய மாட்டார்.
உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தையும், 10ஆம் இடத்தையும், உங்கள் ஜென்ம ராசியையும் சனி பகவான் பார்வை செய்வதால், நோய்நொடிகள் கடன் பிரச்சினை அத்தனையும் நிவர்த்தி ஆகும். இனி கடனை தீர்க்கும் காலம். புதிய வேலையில் அமர்ந்து விடுவீர்கள்.
தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்கில் இருந்த சொத்து கைக்கு வந்துவிடும். இதை சனி பகவான் நிறைவாகவே அருள்வார்.
பரிகாரம்:
சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள்.பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறத்திலோ அல்லது கருப்பு நீலத்திலோ ஆடை அணியுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று வியாழக்கிழமை ( 26.01.2017 ) இரவு 07.31 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார்